ரோஹித் – விராட் ஓய்வு? இந்த இருவரில் ஒருவர் தான் அடுத்த இந்திய கேப்டன் !
IndvSL : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படவுள்ளதாகவும், இருவரும் இந்த ஒரு நாள் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணியில் யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியா அல்லது கே.எல்.ராகுல் இரண்டு பேரில் ஒருவர் அணியை வழிநடத்த வைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா தான் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், இந்திய வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருப்பதால் தங்களுக்கு ஓய்வு வேண்டும் என மூன்று வீரர்களும் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
எனவே, பிசிசிஐ அவர்களுடைய கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், ரோஹித் சர்மா 6 மாதங்கள் ஓய்வு இல்லாமல் கிரிக்கெட் விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.