சென்னை:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு வெளியானது. இந்த ODI மற்றும் T20 தொடர்கள் அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் அறிவிக்கப்பட்ட அணியில், சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாகவும், கில் துணைகேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோஹித் ஷர்மா ODI கேப்டன்ஸியிலிருந்து நீக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹித், சமீபத்திய ODI தொடர்களில் ஃபார்ம் சரிவு மற்றும் தோல்விகளால் இந்த முடிவுக்கு ஆளானார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாள் போட்டியிலும் கில் ODI அணியின் புதிய கேப்டனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரோஹித் ODI அணியில் இடம்பெற்றுள்ளாலும், கேப்டன்ஸி நீக்கம் பேசுபொருளாக வெடித்துள்ளது.
ரசிகர்கள், “ரோஹித் போன்ற அனுபவமிக்க தலைவரை நீக்குவது தவறு” என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த மாற்றம், இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால தலைமை மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.
அணியில் உள்ள வீரர்கள்:கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, அக்ஸர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால். ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூத்த வீரர்களின் அனுபவம், இளம் வீரர்களின் உற்சாகம் இணைந்து, ஆஸ்திரேலியாவின் சவாலான நிலையில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணி அறிவிப்பு, ஆஸ்திரேலியாவின் ‘கார்னிவால் ஆஃப் கிரிக்கெட்’ தொடருக்கு முன் வந்துள்ளது. இந்தியா, 2018-19 தொடரில் ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி பெற்றது, ஆனால் 2020-21-ல் தோல்வியடைந்தது. இந்த முறை, கில் தலைமையில் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
