பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இந்திய பெண்ணை மணக்கிறார்!

பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஏப்ரல் 12, 2010 அன்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.
இந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமியா என்பவரை திருமணம் செய்ய உள்ளததாக தகவல் வெளியானது.ஷாமியா ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தை சார்ந்தவர். இவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இங்கிலாந்தில் இருந்து பொறியியல் படித்த இவர் தற்போது தனது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். இது குறித்து ஹசன் அலி கூறுகையில் “என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவிலை, விரைவில் அந்த செய்தியை கூறுவேன் என குறிப்பிட்டு இருந்தார்.
just wanna clarify my wedding is not confirmed yet, our families have yet to meet and decide upon it. will make a public announcement very soon in sha allah. #gettingreadyforfamilymeetup
— Hassan Ali ???????? (@RealHa55an) July 30, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025