இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து; வைரலாகும் கோலியின் 10 வருடத்திற்கு முந்தைய ட்விட்..!

கேப்டன் கோலியின் முந்தைய ட்வீட்டை தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.

கேப்டன் கோலியின் முந்தைய ட்வீட்டை தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்யுமாறு டாஸ் வென்ற நியூசிலாந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் களமிறங்கியது.

ஆட்டம் தொடக்கத்திலிருந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதன் பின்னர் 111 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14.3 ஓவரில் 2 விக்கெட் இழந்து 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதனால், நியூசிலாந்து அணி T20 உலகக் கோப்பையின் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர். இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்திய அணி தொடர் தோல்வியால் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், சிலர் கேப்டன் கோலியின் முந்தைய ட்வீட்டை தோண்டி எடுத்து இந்தியாவின் தற்போதைய நிலையை சுருக்கமாகக் கூறுகின்றனர். அதன்படி, கோலி பந்து வருடத்திற்கு முன் Sad for the loss 🙁 going home now என ட்விட் செய்து இருந்தார். அந்த ட்விட்டிற்கு கீழ் தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.