#INDvENG: இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு.. ஒருநாள் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்!

England's fastest bowler Jofra Archer has been ruled out for the ODI series against India. England Captain Morgan said this.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என்று அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து ஒருநாள் போட்டி, வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என அந்த அணியின் கேப்டன் மார்கன் தெரிவித்தார். காயம் காரணமாக அவர் ஓய்வு பெற்றுள்ளதாகவும், ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என அவர் தெரிவித்துள்ளார். ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகுவது, இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாகும்.