இந்திய அணி தோற்பதற்கு ஜெர்ஸியே காரணம் – மெகபூபா முஃப்தி!

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது.பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது.பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.

பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்திய அணி தோல்வியடைந்தற்கு தனது ட்விட்டரில் பக்கத்தில் ஜம்மு – காஷ்மீர்  முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி பதிவை ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அந்த பதிவில்“இந்திய அணி  நடப்பு உலகக்கோப்பையில் முதல் முறையாக தோற்பதற்கு காரணம் இந்திய அணி அணிந்து விளையாடிய ஜெர்ஸி தான் காரணம் என பதிவிட்டு உள்ளார்”

உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்திய அணி நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.