தரமான சம்பவம் தாரேன்…வாடா..!வெறித்தனத்தோடு களமிரங்கும் சிஎஸ்கே மல்லுக்கட்டும்..! போட்டி விபரங்கள் உள்ளே

Default Image

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த அந்த 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 போட்டிக்கான அற்விப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்க உள்ளது.முதல் போட்டியிலேயே மும்பையை எதிர்கொள்கிறது சென்னை.

Image result for CSK

கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வெளியாகி இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அட்டவணையை வெளியிட்டு இருக்கின்றனர்.

https://twitter.com/IPLCricket/status/1228694428132499457

Image result for CSK

ஆனால் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், உள்ளிட்ட அணிகள் இது குறித்த எந்தவித அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இருந்த போதிலும் முதல் போட்டி எந்த இரு அணிகளுக்கு இடையே இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில். தற்போது  பதில் கிடைத்துள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி மும்பையில் வரும் மார்ச் 29 ம் தேதி கோலகலமாக நடைபெறுகிறது.

Image result for CSK

கடந்த 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். இத்தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல் போட்டி அமையும் என்று சிஎஸ்கே  ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் 8 மாதங்களாக மகேந்திர சிங் தோனியை இந்திய அணியில் காணாமல் அவருடைய ரசிகர்கள் ஏங்கிய நிலையில் ஒரிரு மாதமில்லை 8 மாதம் கழித்து களமிறங்கவிருக்கிறார் தோனி இதனால் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிர விடுவார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

Image result for CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி விவரம்:

நாள்             அணிகள் (CSK vs)                                        இடம்

மார்ச்  29    மும்பை இந்தியன்ஸ்                       மும்பை

ஏப்ரல் 02      ராஜஸ்தான் ராயல்ஸ்                    சென்னை

ஏப்ரல் 06      கொல்கத்தா நைட் ரைடர்ஸ்         கொல்கத்தா

ஏப்ரல் 11      கிங்ஸ் லெவன் பஞ்சாப்                   சென்னை

ஏப்ரல் 13      டெல்லி கேபிடல்ஸ்                          டெல்லி

ஏப்ரல் 17      கிங்ஸ் லெவன் பஞ்சாப்                   மொகாலி

ஏப்ரல் 19      சன்ரைசர்ஸ் ஐதராபாத்                    சென்னை

ஏப்ரல் 24      மும்பை இந்தியன்ஸ்                        சென்னை

ஏப்ரல் 27      ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்     சென்னை

ஏப்ரல் 30      சன்ரைசர்ஸ் ஐதராபாத்                     சென்னை

மே 4           ராஜஸ்தான் ராயஸ்                              ஜெய்பூர்

மே 7           கொல்கத்தா நைட் ரைடர்ஸ்               சென்னை

மே 10        டெல்லி கேபிடல்ஸ்                              சென்னை

மே 14        ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்         பெங்களூர்

Image result for CSK

ஆகியவை படி சென்னை அணி வெறித்தனத்தோடு களமிரங்க காத்திருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்