இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, 3-வது நாள் தேனீர் இடைவேளை முடிவில் 195/7 ரன்கள் குவிப்பு.
இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியில் சாகிர் ஹசன்(51), லிட்டன் தாஸ்(58*) மற்றும் நூருல் ஹசன்(31) ரன்கள் குவிக்க, ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது. தேனீர் இடைவேளை வரை அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்துள்ளது.
லிட்டன் தாஸ்(58*) மற்றும் தஸ்கின் அஹ்மது (15) ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்களும், அஸ்வின், உனட்கட், சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இந்தியாவை விட வங்கதேச அணி, 108 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.