INDvsBAN TestSeries: வங்கதேசம் 2 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.!

Default Image

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 2-வது நாளில் தேனீர் இடைவேளையின் போது வங்கதேசம் 37/2 ரன்கள் குவிப்பு.

நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 410 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியில், சிராஜ் வீசிய முதல் பந்திலேயே நஜ்முல் ஹூசைன் சான்டோ, பந்த் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டாக யாசிர் அலி 4 ரன்களுக்கு உமேஷ் யாதவின் பந்தில் போல்டானார்.

அதன்பிறகு களமிறங்கிய லிட்டன் தாஸ், சாகிர் ஹசனுடன் சேர்ந்து விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சின் தேனீர் இடைவேளையின் போது வங்கதேச அணி 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் குவித்துள்ளது. லிட்டன் தாஸ் 24 ரன்களும், சாகிர் ஹசன் 9 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்