INDvsBAN ODI: இரட்டை சதமடித்தார் இஷான் கிஷன்! இந்தியா அதிரடி பேட்டிங்.!
வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம்.
இஷான் கிஷன் அதிரடியால் இந்திய அணி 295/1 ரன்கள் குவித்துள்ளது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தவான் 3 ரன்னில் முதல் விக்கெட்டை இழக்க அதன் பின் இஷான் கிஷன்-விராட் கோலி ஜோடி சேர்ந்து 280 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றனர்.
மைதானத்தின் நாலாபுறமும் பந்தை அடித்து நொறுக்கிய இஷான் கிஷன் 126 பந்துகளில் 23 போர்கள், 9 சிக்ஸர்களுடன் 200* ரன்களும், விராட் கோலி 85* ரன்களும் குவித்து விளையாடி வருகின்றனர். 35 ஓவர்கள் முடிவில் இந்தியா 295/1 ரன்கள் குவித்துள்ளது.