INDvsAUS : ஸ்ரேயாஸ், ரோஹித் அரைசதம்..ஆஸி அணிக்கு இது தான் டார்கெட்!

ஸ்ரேயாஸ், ரோஹித் அரைசதம் விளாசிய நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா அணி 265 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

rohit and shreyas iyer

ஓவல் :ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தவுடன் சிறப்பான தொடக்கம் இருக்கும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது என்று சொல்லவேண்டும்.

ஏனென்றால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் கில் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க அவருக்கு அடுத்ததாக வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். எனவே தொடக்கத்திலே இந்தியா தடுமாறிய நிலையில் ரோஹித் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி சிறப்பாக விளையாடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று கூறலாம்.

ரோஹித் அதிரடி கலந்த நிதானத்துடன் விளையாடி 73 ரன்களுக்கு அவுட் ஆக, அவருக்கு அடுத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு தொடர்ச்சியாக மீண்டும் பழையபடி விக்கெட்கள் வேகமாக சரிய ஆரம்பித்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ் குமார் ரெட்டி 8, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். விக்கெட் ஒரு பக்கம் விழுந்தாலும் கூட அக்சர் படேல் நிதானமாக நின்று 44 ரன்கள் எடுத்துக்கொடுத்து அவுட் ஆகினார்.

பிறகு கடைசி நேரத்தில் ஹர்ஷித் ராணா 23 ரன்கள் எடுத்த நிலையில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸி அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4, சேவியர் பார்ட்லெட் 3, மிட்செல் ஸ்டார்க் 2, விக்கெட்கள் எடுத்தனர்.  இந்திய அணி 264 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக 265 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்ரேலியா அணி களமிறங்கவுள்ளது.