INDvsAUS : மீண்டும் மீண்டுமா டக்-அவுட் ! திணறும் விராட் கோலி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை போல 2வது போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆகியுள்ளார்.

virat kohli odi sad

ஓவல் :ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டாகி, ரசிகர்களை ஏமாற்றியுள்ளார். அக்டோபர் 23, 2025 அன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கோலி முதல் போட்டியைப் போலவே 0 ரன்களுக்கு அவுட்டாகினார். இந்திய அணி, சுப்மன் கிலின் தலைமையில் 2027 உலகக் கோப்பைக்கு தயாராகும் நிலையில், கோலியின் தோல்வி அணியின் மனநிலையை பாதித்துள்ளது. அவரை போல முக்கியமான வீரர் பார்முக்கு வராதது இந்த ODI தொடர் இந்தியாவுக்கு சவாலாக மாறியுள்ளது.

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ODI-யில், இந்தியா தற்போது விளையாடிக்கொண்டு இருக்கும் நிலையில், சேவியர் பார்ட்லெட் வீசிய பந்தில் விராட் LBW ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார். கோலி, டெஸ்ட் மற்றும் T20 ஃபார்மட்டுகளில் ஓய்வு பெற்ற பிறகு, ODI-யில் மட்டும் விளையாடுகிறார். 7 மாதங்களுக்குப் பின் சர்வதேச போட்டியில் களம் கண்ட கோலி, முதல் போட்டியில் டக் அவுட்டாகி, இரண்டாவது போட்டியிலும் அதே நிலை. ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட தொடர், அக்டோபர் 25 அன்று சிட்னியில் முடியும். இந்தியா, முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், தொடர் இழப்பு உறுதி. ரசிகர்கள், கோலி-ரோஹித் ஜோடியின் ஃபார்ம் இழப்பால் கவலையடைகின்றனர். ஆஸ்திரேலிய வேக பந்துவீச்சாளர்கள், இந்திய பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்தி வருகின்றனர்.

சுப்மன் கிலின் தலைமை, இந்த சூழலில் அணியை ஒருங்கிணைக்க வேண்டிய நிலை. கோலி, தனது அனுபவத்தால் அடுத்த போட்டியில் திரும்பி வருவார் என நம்புகின்றனர். ரோஹித் இந்த போட்டியில் சற்று நிதானமாக விளையாடி வருவதன் காரணமாக அவர் பழைய பார்முக்கு வருவார் என நம்பி போட்டியை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.