U19 squad: ஆசியகோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துபாய்க்கு இந்திய அணியுடன்

Featured image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துபாய்க்கு இந்திய அணியுடன் மூன்று காத்திருப்பு வீரர்கள் செல்கின்றனர். இது தவிர, துபாய்க்கு அணியுடன் பயணம் செய்யாத நான்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக  உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை போட்டிகள் டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி அதிகபட்சமாக 8 கோப்பைகளை வென்றுள்ளது.

19 வயதுக்குட்பட்ட ஆசியக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி:

அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர் ), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன் ), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கௌவாட், ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

காத்திருப்பு வீரர்கள்– பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், முகமது அமன்.

ரிசர்வ் வீரர்கள்:திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், விக்னேஷ், கிரண் சோர்மலே