இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் பாகிஸ்தான் கேப்டன்!

Pakistan captain Babar Azam has topped the ICC ODI batting rankings behind captain Virat Kohli.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம்.

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 331 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 332 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. இதனால் 3:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இந்த ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி ஒரு சத்தத்தை அடித்துள்ளார். இதுவரை 81 இன்னிங்ஸ்களில் 14 சதங்களை விளாசியுள்ளார்.

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அடித்த சத்தம் மூலம் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும், ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 150+ ஸ்கோரை எட்டிய முதல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான். இதற்கு முன்பாக ஷோயப் மாலிக் இந்தியாவுக்கு எதிராக 2008-ல் 125 எடுத்தது தான் பாகிஸ்தான் கேப்டன் ஒருவரின் அதிகபட்ச ரன் எண்ணிக்கை சாதனையாக அமைந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node