பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா நடத்திய உலகக் கோப்பையில் நுழைந்தது. பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தனர். இதனால் உலகக் கோப்பையின் குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் மிகவும் மோசமாக செயல்பட்டதால் கேப்டன் பாபர் அசாமை பல மூத்த நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர். […]
பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நாளை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாபர் ஆசம் கூறுகையில், நாங்கள் இந்தியாவிடமிருந்து நிறைய அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ளோம். பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் வென்றிருக்க வேண்டும். உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு யாரையும் குறை கூற முடியாது. பந்துவீச்சையோ..? பேட்டிங்கையோ..? நீங்கள் குறை சொல்ல முடியாது. எங்களின் […]
2023 உலகக்கோப்பை : 19-வது லீக் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி இருக்கும் என்றே கூறலாம். ஏனென்றால், இந்த இரண்டு அணிகளின் ஃபார்ம் இந்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோதிய போட்டியில் இந்தியா தான் வெற்றி வெற்றிபெற்றது. அதைப்போல, நெதர்லாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் மோதிய […]
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான போட்டி இன்று தொடங்கும் நிலையில், நேற்று தொடரில் பங்கேற்கு அனைத்து அணிகளின் கேப்டன்களை அகமதாபாத் வரவழைத்து உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து “கேப்டன்ஸ் மீட்” என்ற பெயரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தொகுத்து வழங்கினார். […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இந்தியர்களுக்கு மட்டுமே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இரண்டு போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டது. ஆனால், மறுபக்கம் உலகக்கோப்பை தொடரில் […]
இப்படி விளையாடினால் டி-20 உலகக்கோப்பையில் முதல் சுற்றில் கூட வெற்றி பெறமுடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர், அந்த அணி வீரர்களை எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3-3 என்ற சமநிலையில், நேற்று நடந்த 7 ஆவது போட்டியில் 67 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரையும் 4-3 என்ற கணக்கில் வென்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பாபர் […]
விராட் கோலியின் உலக சாதனையை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சமன் செய்துள்ளார். இந்தியாவின் விராட் கோலி டி-20 கிரிக்கெட்டில் 81 இன்னிங்சில் மட்டுமே ஆடி அதிவேகமாக 3000 ரன்களை கடந்தவர் என்ற சாதனை படைத்திருந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தற்போது இந்த சாதனையை சமன் செய்துள்ளார். அவரும் 81 இன்னிங்ஸ் விளையாடி இந்த சாதனை படைத்துள்ளார். தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் […]
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடம். இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 331 ரன்கள் எடுத்தனர். […]