11 ஓவரில் … 4 மெய்டன் ,17 ரன்.. 3 விக்கெட் அசத்திய ஆண்டர்சன்..!

Default Image

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 05-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இன்று கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதனால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்  ஆண்டர்சன் பங்களிப்பு இரண்டாவது இன்னிங்சில் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் இந்திய அணியின் சுப்மான் கில், ரஹானே, பண்ட் என 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஆண்டர்சன் வீசிய 11 ஓவரில் 4 ஓவரை மெய்டன் செய்து வெறும் 17 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால்,  இங்கிலாந்து அணி வெற்றிபெற ஆண்டர்சன் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்