இலங்கை அணியை தற்காலிமாக தடை செய்த ஐசிசி..!

இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இலங்கை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் வெளியேறியது. இலங்கை அணி 9 லீக் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 7 போட்டிகளில் தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருந்து வெளியேறியது.
அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 302 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியை சந்தித்தது.குறிப்பாக வனிந்து ஹசரங்கா உட்பட சில முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதுவும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் கலைத்து புது நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த செயல் ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இலங்கை அரசு தலையீடு இருப்பதால் இலங்கை அணியை ஐசிசி தற்காலிமாக தடை செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை விரைவில் உறுதி செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025