பிரம்மாண்டமான குவாலிபயர்-1! இறுதி போட்டிக்கு தகுதி பெற போகும் முதல் அணி எது ?

சென்னை : ஐபிஎல் தொடரின்  இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முதல் அணிக்கான குவாலிபயர் 1 போட்டியானது இன்று நடைபெறுகிறது

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் புள்ளிபட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் நான்கு அணிக்கான பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறத. இதில் புள்ளி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. 

இன்று நடைபெறும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் இந்தத் தொடரில் மிக வலிமையான அணிகளாக திகழ்ந்தனர். இதில் வெற்றி வரும் அந்த அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 

தோல்வியடையும் அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியுடன் நாளை மறுநாள் இதே நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நேருக்கு நேர் : 

இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் ஒருமுறை மோதி உள்ளனர் அந்த ஒரு முறையும் கொல்கத்தா அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேராக 26 முறை மோதி உள்ளது அதில் 17 முறை கொல்கத்தா அணியும் வெறும் 9 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் :

ஹைதராபாத் அணி

அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

கொல்கத்தா அணி

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested