என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!

A day after joining the Indian team after two weeks of isolation, Rohit Sharma started training with the team ahead of the third Test.

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. முழு உடல்தகுதி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தனது உடல்தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்த ஒரு நாள் கழித்து, ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியுடன் பயிற்சியைத் தொடங்கினார். பயிற்சியிலிருந்து ரோஹித்தின் புகைப்படங்களை பிசிசிஐ பகிர்ந்ததுள்ளது.

unknown node

அதில், புகைப்படத்தை பகிர்ந்து “என்ஜின் இப்போதுதான் தொடங்குகிறது” என்று தலைப்பிட்டுள்ளார். இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் போட்டிகள்முடிந்துள்ள நிலையில் 3-வது போட்டி வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.