CSKvsMI : சிவம் துபே, ருதுராஜ் அரைசதம்... ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய தோனி .. இலக்கை எட்டுமா மும்பை?

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய  சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர்.

Featured image

ஐபிஎல் 2024: முதலில் இறங்கிய  சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

சென்னை அணியில் வழக்கமாக தொடக்கவீரராக ருதுராஜ் களமிறங்குவார் ஆனால் இன்றைய போட்டியில் ருதுராஜிற்கு பதிலாக  ரஹானே களமிறங்கினார். அதனால் ரச்சின் ரவீந்திரன், ரஹானே இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் இருவருமே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில் 2-வது ஓவரில் ரஹானே 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க கோட்ஸி 5 -வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் கெய்க்வாட்  2 பவுண்டரி, 1 சிக்ஸர் என மொத்தம் 14 ரன்கள் எடுத்தார். எதிர்முனையில் விலையாடி வந்த ரச்சின் ரவீந்திரன் 8-வது ஓவரில் ஒரு சிக்ஸர் விளாச அடுத்த பந்திலே விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்த நிலையில் அடுத்த சிவம் துபே களமிறங்க அவர்  5 பந்திற்கு 2 ரன்கள் மட்டுமே  எடுத்து இருந்தார். அந்த நிலையில் 10-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் சிவம் துபே 4 பவுண்டரி அடித்து ரசிகர்களுக்கு சற்று உற்சாகத்தை கொடுத்தார்.

இதற்கிடையில் கேப்டன் ருதுராஜ் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ஒரு சிக்ஸர் அடித்து அரை சதம் விளாசினார். சென்னை அணி  11-வது ஓவரில் இருந்து 15 -வது ஓவர் வரை அந்த  ஐந்து ஓவர்களில் 79 ரன்கள் எடுக்கப்பட்டது.  அதிலும் 14 மற்றும் 15 -வது  ஓவரில் மொத்தம் 39 ரன்கள் குவித்தது.

அடுத்த சில நிமிடங்களில் 28 பந்தில் சிவம் துபேவும் அரை சதம் விளாசினார். சிறப்பாக அரைசதம் அடித்து விளையாடி வந்த கேப்டன் ருதுராஜ்  69 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். சிவம் துபே ,  ருதுராஜ்   கூட்டணியில் மொத்தம் 90 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டை இழக்க அடுத்து தோனி களமிறங்க 4  முதல் பந்தில் ஹாட்ரிக்   சிக்ஸர் விளாசினார்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர்.  சிவம் துபே 66* ரன்களுடனும், தோனி 20* ரன்களுடனும்  கடைசிவரை களத்தில் இருந்தனர்.  மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா  தலா 2 விக்கெட்டையும், ஜெரால்டு கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால்,  தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

மும்பை அணி கடந்த போட்டியில் பெங்களூரூ அணியுடன் இதே மைதானத்தில் விளையாடியது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 196 எடுத்தது. அடுத்து களம் இறங்கி மும்பை  15.3 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்..? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.