ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார். டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய […]
குவாலியர் : வங்கதேச அணி இந்தியாவில் மேற்கொண்டு விளையாடி வரும் சுற்று பயணத்தில், அடுத்ததாக 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில், முதல் போட்டியானது வரும் ஞாயிற்றுகிழமை (அக்.6ம் தேதி) மாலை 7.30 மணிக்கு குவாலியர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக பிசிசிஐ, வங்கதேச அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான அணியை அறிவித்திருந்தது. அதை பார்த்த இந்திய ரசிகர்கள் பலரும் வரவேற்றாலும், பல ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளை பிசிசிஐ-யிடம் முன்வைத்தனர். மேலும், அந்த […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நாளுக்கு நாள் சென்னை, மும்பை, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட அணிகளில் செய்யப் போகும் மாற்றம் குறித்த ஒரு சில தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது அணியில் 5 வீரர்களை தக்க வைக்கப் […]
விராட் கோலி : டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலியின் பார்ம் விமர்சிக்கும் வகையில் இருப்பதால் அவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் சோகத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் வந்தாலும் மற்றோரு பக்கம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி பழைய பார்முக்கு திரும்புவார் என பேசி வருகிறார்கள். குறிப்பாக, சுனில் கவாஸ்கர் கூட பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் ஷிவம் துபே […]
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் அந்த வீரருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என அவரது கருத்தை கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர். டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெட் இண்டீஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் […]
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் […]
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் அனைத்தும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான 15 கொண்ட இந்திய அணியை […]
ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே முதலில் ஐபிஎல் தொடரில் முதலில் 2019 ஆண்டு ஆர்சிபி அணிக்காக களமிறங்கினார். ஆனால், தொடர்ந்து 3 வருடம் அந்த அணியில் இருந்து விளையாடாத அவர் 2022 ம் ஆண்டு சென்னை அணிக்காக இடம் பெற்ற […]
ஐபிஎல் 2024 : மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் ‘இம்பாக்ட் பிளேயர்’ விதியை பற்றி பேசி இருக்கிறார். ஐபிஎல்லில் உள்ள இம்பாக்ட் பிளேயர் விதிப்படி, ஒரு போட்டிக்கு முன் 11 வீரர்களுடன் கூடுதலாக ஐந்து மாற்று வீரர்களின் பெயர்களை டாஸ் போடும் பொழுது அறிவிக்க வேண்டும். அதன் பிறகு விளையாடும் பொழுது ஏதாவது ஒரு வீரருக்கு பதிலாக மாற்று வீரராக அதாவது (இம்பாக்ட் ப்ளேயர் விதிப்படி) அணியில் இடம்பெற வைத்து விளையாடலாம். […]
ஐபிஎல் 2024 : மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் 2-வது போட்டியில் சென்னை, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீச தேர்வு செய்ய முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் வழக்கமாக தொடக்கவீரராக ருதுராஜ் களமிறங்குவார் ஆனால் இன்றைய போட்டியில் ருதுராஜிற்கு […]
CSKvsGT : ஐபிஎல் தொடரின் 7-வது போட்டியாக சென்னை அணியும், குஜராத் அணியும் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜும், ரச்சின் ரவிந்தராவும் களமிறங்கி குஜராத் அணியின் பவுலிங்கை துவம்சம் செய்தனர். அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா 46 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய ரஹானேவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து […]
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இரண்டாவது டி20 போட்டி இந்த ஊரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக குல்பாடின் 57 ரன்களும், நஜிபுல்லா 23 ரன்களும், முஜீப் 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட […]
நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே 40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார். இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று 17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய […]
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,தனது நீண்டநாள் காதலியை நேற்று திருமணம் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,அவரது நீண்டநாள் காதலியான அஞ்சும் கானை நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து,திருமண விழாவில் எடுத்த சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம்,பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும்,திருமணம் குறித்து சிவம் கூறுகையில்: “நாங்கள் அன்பை விட அதிகமான அளவு நேசித்தோம்,இப்போது,எங்களது வாழ்க்கை தொடங்குகிறது.”என்று பதிவிட்டிருந்தார். View this post on Instagram […]