பிரமாண்ட விலைக்கு ஏலம் போன கேமரூன் கிரீன்! கொல்கத்தா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா?

கேமரூன் க்ரீனை ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

kkr cameron green

துபாய் :IPL 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் க்ரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.2 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது ஏலத்தின் மிக உயர்ந்த தொகையாக அமைந்துள்ளது. KKR-ன் இந்த முடிவு அணியின் வேகப்பந்து ஆல்-ரவுண்டர் தேவையை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. க்ரீன் IPL-ல் 29 போட்டிகளில் 707 ரன்கள், 16 விக்கெட்டுகள் எடுத்த அனுபவம் கொண்டவர்.

இந்த ஏல தொகையில் ரூ.18 கோடி மட்டுமே க்ரீனுக்கு செல்லும் என்று தெரிகிறது. மீதமுள்ள தொகை IPL நிர்வாகத்திடம் செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன. IPL ஏல விதிகளின்படி வெளிநாட்டு வீரர்களுக்கு வரி, நிர்வாக செலவுகள் கழிக்கப்பட்ட பிறகே தொகை வழங்கப்படும். இது ஏலத்தில் பெரிய தொகைக்கு போகும் வீரர்களுக்கு பொதுவானது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ரூ.25 கோடி வரை ஏலம் கேட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கடைசியில் பின் வாங்கியது. CSK-ன் பட்ஜெட் குறைவாக இருந்ததால் அவர்கள் விலகியதாக கூறப்படுகிறது. KKR-ன் இந்த அதிரடி ஏலம் அணியை வலுப்படுத்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். க்ரீன் அண்ட்ரே ரஸ்ஸெல் இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஏலம் IPL வரலாற்றில் பெரிய தொகைக்கு போன வீரர்களில் ஒருவராக க்ரீனை மாற்றியுள்ளது. KKR-ன் ரூ.64 கோடி பட்ஜெட்டில் இந்த பெரிய தொகை செலவு அணியின் உத்தியை வெளிப்படுத்துகிறது. ஏலம் தொடர்வதால் இன்னும் பல ஆச்சரியங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.