மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு

BCCI chief Sourav Ganguly tests negative for COVID-19 infection, no sign of fever post angioplasty ,Report says

சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு  மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ  தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் கங்குலிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .