Tag: SouravGanguly

பிசிசிஐ தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை என தகவல்!

பதவி காலம் அக்.18ம் தேதியுடன் முடியும் நிலையில், பிசிசிஐ தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட மாட்டார் என தகவல். பிசிசிஐ தலைவர் பதவி காலம் அக்டோபர் 18ம் தேதியுடன் முடியும் நிலையில், நடக்கவிருக்கும் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்.18-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ தலைவர் தேர்தலில் கங்குலி போட்டியிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐயின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க ரோஜர் பின்னி மிகவும் விருப்பமானவர் என்றும் தகவல் […]

BCCI 3 Min Read
Default Image

#BREAKING: சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியானது..!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 வயதான சௌரவ் கங்குலி கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவின் Omicron பரவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் கங்குலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக சௌரவ் கங்குலி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

coronavirus 3 Min Read
Default Image

மருத்துவமனையில் கங்குலி – 2வது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை.!

சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்குலிக்கு 2வது முறையாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை கூறியதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், கங்குலியின் இருதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்களில் 2 ஸ்டெண்டுகள் பொறுத்தப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. […]

angioplasty 3 Min Read
Default Image

#BREAKING: கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி – அப்போலோ மருத்துவமனையில் அனுமதி.!

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2-ஆம் தேதி சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து கங்குலி வீடு திரும்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

apollohospital 2 Min Read
Default Image

சிகிச்சை முடிந்தது ! மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குலி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவர் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், உட்பட பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். இதன் பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் […]

SouravGanguly 3 Min Read
Default Image

தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை

பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட […]

BCCI 4 Min Read
Default Image

மம்தா vs பாஜக: மேற்குவங்கத்தை பிடிக்க கங்குலியிடம் நிர்பந்தம்.!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது உள்ள பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இன்னும் ஒருசில மாதங்களில் மேற்கு வாங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக […]

#BJP 7 Min Read
Default Image

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு

சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு  மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ  தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் […]

BCCI 3 Min Read
Default Image

கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்.!

சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். […]

#HeartAttack 3 Min Read
Default Image

#BREAKING: சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி.!

BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-ன் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சுவலி காரணமாக சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

BCCI 2 Min Read
Default Image

கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள்! கங்குலிக்கு அறிவுரை கூறிய நக்மா!

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கங்குலி, என் மகள் சின்ன பிள்ளை. அவளுக்கு இங்குள்ள அரசியல் தெரியாது என்பது போல தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கங்குலி மகள் சனா […]

CAA 3 Min Read
Default Image

தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும் -பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும் என்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தெரிவித்துள்ளார். இன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில்  பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். பிசிசிஐ-யின் 39-வது தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி. இதன் பின்னர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பிசிசிஐ அமைப்பை ஊழல், லஞ்சம் இல்லாத நிலைமைக்கு மாற்றுவேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இனி முழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும். இந்திய […]

#Cricket 3 Min Read
Default Image