மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

அடுத்த மாதம் தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

Team India

டெல்லி :மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 2025-27 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இந்தியாவின் முதல் உள்நாட்டு டெஸ்ட் தொடர் இதுவாகும்.

இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஜெகதீசன், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட 3 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஷுப்மான் கில் தலைமையிலான இந்த அணியில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் வாய்ப்பு வழங்கப்பட்ட கருண் நாயர் இடம்பெற்றுள்ளார். துணை கேப்டனாக இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பந்த் இன்னும் முழுமையாக உடற்தகுதி பெறவில்லை, அவர் இல்லாத நிலையில், துருவ் ஜூரெல் என். ஜெகதீசனுடன் இரண்டாவது விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆசிய கோப்பையில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி

ஷுப்மான் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்தத் பாடிக்கல், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பிரசித் ஜேத் கிருஷ்ணா, குல்ராயன் ஜடேகாவ் கிருஷ்ணா, குல்ராயன் ஜடேகாவ் கிருஷ்ணா.