டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம் தேதி வென்றது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் போட்டியை பாகிஸ்தான் நடத்தி இருந்தாலும் இந்திய அணி பங்கேற்ற அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முன்னதாக முதற்பரிசு தொகை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய […]
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில். அவர் வரவிருக்கும் 2027 ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், ரோஹித் சர்மா ஓய்வு பெறவேண்டும் என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றிபெற்றவுடனே ஓய்வை அறிவித்திருக்கலாம். இந்த தொடருக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக விளையாடவிருக்கும் மிக்பெரிய தொடர் என்றால் உலகக்கோப்பை 2027 தான். ஏற்கனவே, ரோஹித் டி20 […]
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். அதன்பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு அறிவிப்பார் என தகவல்கள் வெளியான சூழலில், தனக்கு இப்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணமில்லை என திட்டவட்டமாக அறிவித்து விளக்கம் கொடுத்தார். இருப்பினும் அவர் ஓய்வு […]
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் சமயத்தில், அவர்கள் கொண்டாட்டத்திற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி சேர்க்கும் விதத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியூட்டியுள்ளது. அணிகள் டாப் லிஸ்ட் : ஒருநாள் கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. இந்திய அணி 53 போட்டிகள் விளையாடி 6,486 புள்ளிகள் பெற்றுள்ளன. இரண்டாவது […]
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா இறுதி நேரத்தில் வெற்றிக்கான ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்துச் சென்றார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சிறப்பாக விளையாடி 49 ஓவர்களில் இலக்கை […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோலி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் தோல்வி அடைந்தது பற்றியும், அணியில் இளம் வீரர்களுடன் விளையாடுவது பற்றியும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து பேசிய […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் […]
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. நாளை மதியம் 2.30 அளவில் போட்டி தொடங்கும், அதற்கு முன் 2 மணிக்கு டாஸ் போடப்படும். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி என்பது இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இரு அணிகளுக்கும் […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இந்திய அணி தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்த நிலையில், அதில் நியூசிலாந்து அணி தான் வெற்றிபெற்றது. அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்த சூழலில் போட்டி குறித்து அந்த வீரர் திருப்பு […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு முன்பு, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில், நியூசிலாந்து அணி தான் அசத்தல் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. எனவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் […]
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று குழு A இல் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு […]
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தீயாக பரவியது. அதன்பிறகு ஓய்வு பெறுவதற்கு இப்போது எண்ணமில்லை..ஓய்வு என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்..நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன்” எனவும் பேசி […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது இன்று வரை மறக்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எனவே, 25 ஆண்டுகளுக்கு […]
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த வரலாற்றுச் சம்பவம் இன்று வரை இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்திற்குரிய […]
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி கொண்டு வந்த சிறந்த கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்துகொண்டு இருக்கிறது. போட்டியில் கோப்பையை வென்று கொடுத்துவிட்டார் என்றால் இன்னுமே அதிகமான பாராட்டுக்கள் கிடைக்கும். கேப்டனாக இந்த தொடரில் அவர் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றாலும் பேட்டிங்கில் பெரிய […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்று 14-ஆண்டுகாள பழியை தீர்த்தது மட்டுமின்றி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளாது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கேப்டனாகவும் அவர் பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அது என்ன சாதனை என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள முக்கியமான நான்கு ICC இறுதிப் போட்டிகளுக்கும் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி, 49.3 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 39 ரன்கள் எடுத்தார். கூப்பர் கோனொலியால் கணக்கைத் திறக்க முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித் 73, மார்னஸ் லாபுசாக்னே 29, ஜோஷ் […]
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் விளையாடி வருகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்ரேலியா அணி “நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்” என பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக பேட்டிங் தேர்வு செய்தது போல தொடக்கமும் அசத்தலாக அமைந்தது என்று சொல்லலாம். இந்தியாவுக்கு எதிராக பயங்கர பார்ம் வைத்திருக்கும் ட்ராவிஸ் […]
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் விளையாடுவார் என்று கூறலாம்.இதுவரை இந்தியாவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 9 ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடி இருக்கிறார். 9 போட்டிகளில் 345 ரன்கள் ஒரு சதமும் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அவர் பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் எப்படி விளையாடப்போகிறார் என்கிற […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்ரேலிய அணியும் மோதுகிறது. இந்த போட்டியை அரையிறுதி போட்டி என்பதை தாண்டி பெரிய எதிர்பார்ப்புகள் ஏற்படுவதற்கு காரணமே, 2011-க்கு பிறகு..? பழிதீர்க்குமா இந்தியா? என்பது தான். ஏனென்றால், 2011 உலகக்கோப்பை காலிறுதியை அடுத்து இந்திய அணி ஐசிசி நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் […]