விராட் கோலி இல்லாமல் டாப் 5 வீரர்களை தேர்வு செய்த ஏபி டி வில்லியர்ஸ்!

ஜாக் கல்லிஸ், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், மொஹம்மத் ஆசிப், ஷேன் வார்ன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

virat kohli and ab de villiers

டெல்லி :தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஜாம்பவானுமான ஏபி டி வில்லியர்ஸ், சமீபத்தில் தனது முதல் ஐந்து கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில், தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் RCB அணி வீரருமான விராட் கோலியை சேர்க்கவில்லை.‘Beard Before Wicket’ பாட்காஸ்டில் பேசிய டி வில்லியர்ஸ், ஜாக் கல்லிஸ், மொஹம்மத் ஆசிப், ஷேன் வார்ன், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் மற்றும் சச்சின் டெண்டுல்கரை தனது பட்டியலில் சேர்த்து, அவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை விளக்கினார்.

அப்போது கோலியை தவறவிட்டதற்காக மன்னிப்பு கேட்டார்.“ஜாக் கல்லிஸ், ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், மொஹம்மத் ஆசிப், ஷேன் வார்ன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை தேர்ந்தெடுத்தேன். சச்சின் மைதானத்திற்கு பேட் செய்ய வரும்போது ரசிகர்களின் ஆரவாரம் எல்லாவற்றையும் நிறுத்திவிடும். அவரை பேட் செய்ய பார்ப்பது அற்புதமாக இருக்கும். விராட், மன்னிப்பு, சச்சினைத் தேர்ந்தெடுத்தேன். இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் கடினம்,” என்று டி வில்லியர்ஸ் கூறினார்.

அவர், கோலியுடன் RCB அணியில் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடி, மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.டி வில்லியர்ஸ், தனது தேர்வுகளை விளக்கும்போது, “ஜாக் கல்லிஸ் எல்லா வகையிலும் சிறந்த ஆல்-ரவுண்டராகவோ, ஒருவேளை எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரராகவோ இருக்கலாம். மொஹம்மத் ஆசிப் என எதிர்கொண்ட சிறந்த சீமர்.

வார்னுக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அவர் எனக்கு பெரிய சவாலாக இல்லை. அவரது ஆளுமை, அந்த தொப்பி, மஞ்சள் முடி எல்லாம் பிடித்திருந்தது. ஃபிளின்டாஃப் ஒரு பெரிய போட்டி வீரர், அவரது எட்ஜ்பாஸ்டனில் கல்லிஸுக்கு எதிராக வீசிய யார்க்கர் சிறந்தது,” என்று தனது அனுபவங்களை பகிர்ந்தார். விராட் கோலியை பட்டியலில் சேர்க்காதது, ரசிகர்கள் மத்தியில் சிறு விவாதத்தை ஏற்படுத்திய போதிலும், டி வில்லியர்ஸ் மற்றும் கோலியின் நட்பு எப்போதும் ரசிகர்கள் கொண்டாடப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.