சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. […]
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 […]
பிரிஸ்பேன்: இந்தியா -ஆஸ்ரேலியா மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் விதமாக அமைந்தது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், […]
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதை வழக்கமாகவே வைத்து இருக்கிறார். அப்படி தான் தற்போது, வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ரன்கள் எடுத்து பிரமாண்டமான சாதனையை செய்து அந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார். அது என்ன சாதனை என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் 27, 000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். […]
சென்னை : இன்றைய நாளின் (16-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், சச்சின் சாதனை பற்றிப் பேசிய ரிக்கி பாண்டிங் முதல் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் வரையில் உள்ள சில முக்கிய செய்தி தொகுப்புகளைப் பற்றிப் பார்ப்போம். ரிக்கி பாண்டிங் ஸ்பீச் …! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்த்தில் இருந்து வருகிறார். இது பற்றிப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங், ‘சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உண்டு’ எனக் கூறியுள்ளார். ஜோ ரூட் இந்த பட்டியலில் 12,027 ரன்கள் அடித்து 7-வது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ்-தென்னாபிரிக்கா தொடர்! வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் […]
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வகையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்து வைத்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் என […]
ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளான ஏப்ரல்-2 அன்று 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்று 2-வது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி. கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே நமக்கெல்லாம் ஒரு தனி எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும் அப்படி தான் 2011 […]
Suriya தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, சச்சின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். அந்த வகையில் அவர் ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை சூர்யா தான் வாங்கி இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் […]
தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே […]
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர். […]
ஒருநாள் உலகக்கோப்பையில் நேற்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் அணியின் நியூசிலாந்து இளம் பேட்ஸ்மேன் ரச்சின் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். ரச்சின் ரவீந்திரன் நியூசிலாந்திற்காக முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுகிறார். அவருடைய வயது […]
டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். மெல்போர்னில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இரட்டை சதமடித்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர், ஒட்டுமொத்தமாக பத்தாவது மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆவார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் […]
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதமடித்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்த பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1,213 நாள்களுக்கு பிறகு விராட் கோலி, இந்த சதத்தை, வங்கதேசத்திற்கு எதிராக அடித்துள்ளார். தற்போது 72 சதங்களுடன் விராட் […]
நேற்று டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயதான ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் தனது மகத்தான பங்களிப்பை அளித்து வந்தார். பெடரர் 24 ஆண்டுகளில் 1500 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர், அடுத்த வாரம் நடைபெறும் […]
தேசிய அளவிலான அணிகளில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டு, மும்பை அணியிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரர் ஆவர். இவர் உள்நாட்டு அளவிலான அணியில் மும்பை அணியிலும், ஐபிஎல் அணியில், மும்பை இந்தியன் அணியிலும் இடம் பெற்று வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான மும்பை அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. […]
சினிமாவில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக பாகிஸ்தான் வீரரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை முஹம்மது […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 15 வது சீசன் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிவடைந்ததும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள சச்சின் டெண்டுல்கரின் கால்களில் விழுந்தார். உடனடியாக சச்சின் அவரை தடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, i […]
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு அமைப்பு பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் 91 நாடுகளை சார்ந்த பிரபலங்களின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக ஆய்வு முடிவுகளை சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ஐசிஐஜே) வெளியிட்டுள்ளது. 12 மில்லியன் ஆவணங்களை கொண்டு செய்யப்பட்ட முடிவில் 300-க்கும் மேற்பட்ட […]
பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் பண்டோரா பபர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த ஆவணத்தில் உள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி வழங்கும் 14 […]
டெஸ்ட் போட்டியில் புஜாரா சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் செதேஷ்வர் புஜாரா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 818 ரன்கள் குவித்துள்ளார். இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டான் மைதானத்தில் வருகின்ற ஜூன் 18 முதல் 22ஆம் தேதி வரை […]