வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை – கமல்ஹாசன்

Kamal Haasan's letter to the party that there is no need to celebrate if there is victory and there is no need to celebrate if there is failure.

வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை, தோல்வி எனில் துவள வேண்டியதில்லை என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் கடிதம்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள், ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக்கூடாது. வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பும் எனக்கு முக்கியமானது. வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளை தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள் என்றும் மக்களுக்காக மக்களுடன் களத்தில் நிற்போம் நாளை நமதே எனவும் தெரிவித்துள்ளார்.

unknown node