சூப்பர்...கொரோனா குறைந்தால் முழு ஊரடங்கு ரத்தா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

Will the full curfew be canceled if the corona drops? - Minister Ma Subramanian's important announcement!

சென்னை:கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னையின் மெரினாவில் உள்ள நேதாஜி சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:

“தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்த நிலையில்,நேற்றைக்கும் இன்றைக்குமான மாதிரிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.இது மன நிறைவாகவே உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை 9 ஆயிரம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது நிறைவைத் தருகிறது.மேலும்,இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது ஆறுதலான விசயமாக உள்ளது.

எனவே,தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது,முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.எனவே,கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது”,என்று தெரிவித்துள்ளார்.