சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கே நேரில் சென்றுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும், அங்கு சென்று உதயநிதிக்கு சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதனை குறித்து […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை நோயாளியுடன் வந்த விக்னேஷ் என்னும் வடமாநில இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக, இரு வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக […]
சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி ஆத்திரத்தில், மருத்துவரின் கழுத்து, முதுகில் சரமாரியாக கத்திக் குத்து விழுந்துள்ளது. வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் தான் இந்த கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த சம்பவம் தொடர்பாக, 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக […]
சென்னை : சமீபத்தில் பிரபல யூ-டியூபர் இர்பான் தனது யூ-டியூப் பக்கத்தில் தனது குழந்தை பிறக்கும் சமயத்தில் எடுக்கப்பட் வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் மருத்துவர்கள் முன்னிலையில் கத்தரிகோலால் வெட்டுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. மருத்துவர்கள் இருக்கும் போதே, அவர்களின் முன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பானுக்கு மருத்துவர் சங்கங்கள் சார்பில் கண்டனங்கள் வலுக்கின்றன. இதுகுறித்து விளக்கம் கேட்டு இர்பான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது […]
திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]
சென்னை: சாலையோரம் சுற்றித்திரிந்த ஒரு நபரின் வாழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தினமும் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல இன்றும் காலையில் சென்னை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக ஒரு முதியவர் சாலையோரம் இருந்த பிளாஸ்டிக், பேப்பர் போன்றவற்றை சேகரித்து அதனை வைத்து வாழ்ந்து வந்துள்ள அந்த நபர் அமைச்சரை பார்த்ததும் வணக்கம் கூறியுள்ளார். அப்போது […]
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த நவம்பர் 18ம் தேதி மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது, இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனை அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. […]
வீராங்கனை பிரியா இறப்பதற்கு முன்பு நடந்தவை பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரிவின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதில் பேசிய அமைச்சர், வீராங்கனை பிரியா இறந்த போதும் அதற்க்கு முன்னரும் முன்னெடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், ப்ரியாவின் கால் அகற்றப்பட்டது தெரிந்ததும், நான் அங்கு சென்றுவிட்டேன். எங்கையாவது தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை […]
தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்களை காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காக்க, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் , பொதுமக்கள் சுகாதாரத்தத்திற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதில் இருந்து, தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 11 ஆயிரம் மருத்துவமனைகளை தாண்டி, புதியதாக […]
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை […]
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம்,உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அந்த வகையில்,இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும்,உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.அந்த வகையில்,வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்திற்கு ரூ 3.5 கோடி ஒதுக்கீடு செய்து ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
சென்னை:வருகின்ற பிப்.8 ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என அனைத்துக்கட்சி கூட்டத்தில் […]
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு. 2021-2022ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பு தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6,999 எம்.பி.பி.எஸ், 1,930 பி.டி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349, தனியார் கல்லூரிகளில் 2,650 என மொத்தம் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. […]
சென்னை:கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 30,744 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து,வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நேதாஜி […]
தமிழகம் முழுவதும் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 14,29,736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசியை அதிகரிக்க மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 19-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த […]
சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 […]
சென்னை:பொங்கல் பண்டிகை என்பதால்,இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில்,கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்நிலையில்,முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் […]
அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களில் நாள்தோறும் தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்று 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பரிசோதனைகள் அடிப்படையில் மேலும் 2,000 அதிகரிக்க கூடும் என்றும் […]
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரை கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும்,எனினும்,கொரோனா பற்றி மக்கள் அச்சப்படுவது அவசியமற்ற ஒன்று எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரானா அச்சத்தின் காரணமாக மதுரையின் கல்லுமேடு அருகே எம்ஜிஆர் காலனியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சாணி பவுடர் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்று,அதில் கொரோனா தொற்று உறுதியான பெண்,சிறுவன் உட்பட 2 பேர் பலியான நிலையில்,மேலும் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை […]
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம். நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது. நீட் விலக்கு பற்றி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடம் […]