அதிமுகவிற்கு கனவாக மட்டுமே இருக்கும் – தி.மு.க எம்.பி கனிமொழி

Will only be a dream for AIADMK - DMK MP Kanimozhi

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் திமுக எம்.பி.கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மதுரை பகுதிகளில்  அதிமாக பெண்கள் தான் இருக்கிறார்கள்.அவர்கள் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடையாது,வேலைவாய்ப்பு கிடையாது,சுய உதவி குழுக்கள் இன்று சரிவர இல்லை.இந்த கோபம் எல்லாம் பெண்கள் மனதில் உள்ளது.ஆட்சி மாற்றம் வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹாட்ரிக் வெற்றி என்பது அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.