தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா ...?

With the Chief Minister holding a consultative meeting, it is expected that the New Year celebrations in Tamil Nadu will be banned.

முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லைகளில் தீவிர கட்டுப்பாட்டுகளை  அமல்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஓமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.