இந்தியாவில் புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்களே உள்ளன, ஆனால் உலகின் சில பகுதிகளில் புத்தாண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. நியூசிலாந்தில் முதலில் புத்தாண்டு தொடங்கியுள்ளதால், ஆக்லாந்து நகரில் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புத்தாண்டு பிறந்ததை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
2023 வருடம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் 2024-ஐ வரவேற்கத் தயாராகிவிட்டனர். அந்த வகையில், தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போதுமே களைகட்டும் என்பதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகரக் காவல் ஆணையர், கொண்டாட்டத்துக்கான விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் போட்டியில், பைக் ரேஸில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீதான […]
புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் விற்பனை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மகளீர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், மண்பாண்டங்கள், பனை ஓலை பொருட்கள் இடம்பெற்றுள்ளது. வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
சென்னை:10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு என்றாலும்,ஜனவரி 1 ஆம் தேதியன்று திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தன்னைச் சந்திப்பதற்காக நேரில் வருவதைக் கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறும்,அதுவே தனக்கு வழங்குகிற சிறப்பான புத்தாண்டுப் பரிசாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் புதிய வடிவான ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பதால்,ஜனவரி 1 ஆம் தேதியன்று திமுக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் தன்னைச் சந்திப்பதற்காக நேரில் […]
முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் […]
கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ளதால் புதிய அனிமேஷன் டூடுலை உருவாக்கியுள்ளது. 2020 என்பது பலருக்கும் மறக்க முடியாத வருடமாகும். ஆனால் தற்பொழுது இந்த 2020 முடிவடைய இன்னும் சில மணிநேரங்கள் இருக்கவுள்ளதால், உலகின் மிகப்பெரிய சேர்ச் என்ஜினான கூகுள், 2021 பிறக்கவுள்ளதையடுத்து புதிய டூடுலை உருவாக்கியது. அதற்கு புத்தாண்டு ஈவ் 2020 (New Year’s Eve) என பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் google.com […]
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது. இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]
நொய்டாவில் வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்பதிவுடன் கூடலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக உலகில் உள்ள அனைத்து மக்களுமே தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது வரையிலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், பண்டிகை காலங்களில் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொடுத்து வந்தாலும் கொரோனா வைரஸ் […]
வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தை மக்கள் சமூக இடைவெளியுடன் கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது குறைந்து கொண்டு வந்தாலும், மீண்டும் வீரியமுள்ள கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு தற்பொழுது வரை அமலில் இருந்தாலும், மக்களுக்காக அரசு அவ்வப்போது சில […]
2020 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை ரூ.315 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்தாண்டு பீரை விட மதுபானங்கள் தான் அதிகளவு விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் குடிமகன்களின் கூட்டம் எங்கு அலைமோதிகிறதோ இல்லையோ, ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து கிடக்கும். இதனால் அங்கு வழக்கத்தை விட மதுவிற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் […]
உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகளின் விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது. நாடுகள் அடிப்படையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. புத்தாண்டு தினத்தை நள்ளிரவு 12 மணிக்கு மக்களின் ஆரவாரத்துடன் உற்சாகமாக வாண வேடிக்கைகள் முழங்க புத்தாண்டு தினம் பிறந்தது. உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்த அதே நேரத்தில் ‘குவா குவா’ என்ற சத்தத்துடன் பிறந்த குழந்தைகளை குறித்த விவரங்களை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதில் வெளியிட்ட அறிக்கையில், 2020 […]
நடிகர் ஆரி “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர். இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார். நடிகர் ஆரி தமிழ் சினிமாவில் “ஆடும் கூத்து “திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. நடிகர் ஆரி இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் […]
புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் நுழைவு வாயில்கள் , நிகழ்ச்சி , விருந்து நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டிசம்பா் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் […]
2018 ஆம் ஆண்டில் 12 மாதங்களில் நடைபெற்ற 12 சிறப்பு நிகழ்வுகளை நாம் இந்த தொகுப்பில் காண்போம்…. ஜனவரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் : ஜனவரி மாதத்தில் பெரிதும் மக்கள் பாதிக்கப்பட்டது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தான் .இதனால் அரசுப்பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். பின் 4ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி முதல் 8 நாட்களாக நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஜனவரி 12 ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டது.இதன் பின்னர் அரசு […]
புத்தாண்டையொட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லி, பெங்களூரு, மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வீதிகளில் நடனம் ஆடியும் பாடல் பாடியும் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். புத்தாண்டையொட்டி மும்பையில் உள்ள விக்டோரியா அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனியார் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகளில் பலர் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனர். நாக்பூர், போபால் உள்ளிட்ட நகரங்களிலும், புத்தாண்டை வரவேற்ற மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் […]
வரும் புத்தாண்டிலும் இந்தியா முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மன் கீ பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னையை சேர்ந்த மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் தன்னிடம் சிகிச்சை பெற வரும் மக்களுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளித்ததாக பிறர் கூற தான் கேட்டிருப்பதாக நினைவுக்கூர்ந்தார். அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்திருப்பதாக புகழாரம் சூட்டினார். ஏழைகள் பயன்பெறும் வகையிலான […]
தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தான் உகாதி அல்லது யுகாதி என கூறப்படுகிறது.யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். மகாராஷ்டிராவை சேர்ந்த மக்களும் இதே நாளை குடிபாட்வா எனவும்,அதேபோல் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது. யுகாதி பச்சடி: வாழ்க்கையின் தத்துவத்தை […]
கிரிகெட் போட்டி இருக்கும் வரை இவரது பெயர் இருக்கும். அவ்வளவு சாதனைகளை இவர் படைத்துள்ளார். அவ்வளவு பெரிய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். தனது புத்தாண்டு கொண்டாட்டத்தை நண்பர்களுக்கு விருந்து சமைத்து கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளளார். source : dinasuvadu.com
2018 புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சி இல்லாத நாடுகளில்தான் அதிகஅளவு குழந்தைகள் பிறந்துள்ளன. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விடவும், இந்தியாவில் அதிகமாக 69,070 குழந்தைகள் அன்றைய தினம் பிறந்துள்ளன. சீனாவில் 44,760, நைஜீரியாவில் 20,210, பாகிஸ்தானில் 14,910, இந்தேனேஷியாவில் 13,370, அமெரிக்காவில் 11,280, காங்கோ நாட்டில் 9,400 எத்தியோபியாவில் 9,020, வங்கதேசத்தில் 8,370 குழந்தைகள் பிறந்துள்ளன. உலக நாடுகளில் பிறந்த […]