கூட்டணியில் இருக்குமா, இருக்காதா? துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக.!

Deputy General Secretary Temujin asked for time to meet the Deputy Chief Minister as good results were not reached in the talks on block allocation.

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டாததால் துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக துணை பொதுச்செயலாளர்.

துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவுக்கு தொகுதிகள் பங்கிடுவதில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டது.

தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அதிமுகவிற்கு, தேமுதிகவிற்கும் இடையே நடைபெற இருந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

எதிர்பார்த்த தொகுதிகளை அதிமுக ஒதுக்காததாலும், உரிய அங்கீகாரம் வழக்காததாலும் தேமுதிக பேச்சுவார்த்தையை தவிர்த்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது தேமுதிக சுதீஷ், துணை முதல்வரை சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.