தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி.
திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நேற்று பாஜகசார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்?
செய்வது அறியாது சிக்கித் தவிக்கும் தமிழக முதல்வர்நவம்பர் நான்காம் தேதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க போவதாக அறிந்தேன். மக்கள் எந்த திசையை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது இதன் மூலமாக வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை விட்டு விட்டு தமிழை வளர்க்க திமுகஅரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாஜகஆதரவாக இருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node