மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார்!

West Bengal Chief Minister Mamata Banerjee has said that history can be made if the opposition is strong.

எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருந்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பாக தேவையான கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாகவும் மரியாதையை நிமித்தமாக சந்தித்தாகவும் கூறியிருந்தார். பின்னர்  காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆனந்த் சர்மா ஆகியோரையும் சந்தித்தார்.

இந்த நிலையில், இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசியுள்ளார். இதன்பின் பேசிய அவர், பாஜக வலிமையான கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை எனவும் கூறினார்.

இதனிடையே, மேற்கு வங்கம் தேர்தல் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக சோனியா காந்தியை, மம்தா பானர்ஜி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.