உங்களை போன்று மனு வாங்கி ஏமாற்றும் நாடகம் எங்களுக்கு கிடையாது- முதல்வர் விமர்சனம்..!

The DMK is the only party that did not petition the people when it was in power and did not solve the problems of the people.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமி பேசியபோது, அதிகாரம் இருந்த போது மக்களுக்களிடம் மனு வாங்காமலும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத ஒரே கட்சி திமுக தான். எடப்பாடி

ஆனால் அதிமுக அரசு அப்படி இல்லை, மக்கள் அரசாங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக அரசாங்கம் மக்களை நாடிச் சென்று மக்களின் பிரச்சினைகள் மனு மூலம் பெறப்பட்டு தீர்வுத்திட்டத்தை கடந்து 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில்  “முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்டம்” என்று அறிவித்தேன்.

இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி மனுக்கள் பெறப்பட்டன. மொத்தமாக 9 லட்சத்திற்கு மேற்பட்ட மனுக்களை நாங்கள் பெற்றோம்.  அந்த மனுக்கள் அனைத்து கணினியில் பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவில் தீர்வு காண முடியும் என கருதி 5 லட்சம் மனுக்கள் தீர்வு செய்தது அதிமுக அரசு என கூறினார்.

இதற்காக மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என மனு வழங்கியவர்களுக்கு பதில் மனு அனுப்பப்பட்டது. எனவே ஒரு அரசு எப்படி செயல்பட என்பதற்கு அதிமுக முன்னோடியாக உள்ளது என தெரிவித்தார். உங்களை போன்று மனு வாங்கி ஏமாற்றும் நாடகம் எங்கள் கட்சிக்கும், அரசுக்கும் கிடையாது என திமுகவை முதல்வர் விமர்சனம் செய்தார்.