தமிழகத்தில் நீர்நிலைகளை துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்

Chennai High Court has directed the Tamil Nadu government to measure water levels directly and accurately.

நீர்நிலைகளை தமிழக அரசு நேரடியாக துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் நீர்நிலைகளை ட்ரோன் மூலமும், ஜி.பி.எஸ் மூலமும் படங்கள் எடுப்பதுடன், தமிழக அரசு நேரடியாக துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அழகுபடுத்தும் பெயரில் இயற்கை நீரோட்டத்துக்கு இடையூறாக எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு பெரும்பள்ள ஓடை கால்வாயில் கட்டுமானத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் நீர்நிலைகளை துல்லியமாக அளவீடு செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம்