#BREAKING: சற்று நேரத்திற்கு முன் பாஜகவில் இணைந்த விஜயசாந்தி..!.

Actress and former MP Vijay Shanthi resigned from the Congress and joined the BJP today. started her political career in 1997 with the BJP.

நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி நேற்று டெல்லி சென்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் விஜயசாந்தி பாஜகவில் இணைந்தார். தென்னிந்தியவின் மிகவும் பிரபலமான நடிகையான விஜய் சாந்தி, 1997-ல் பாஜக மூலம் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

2005 ல் தெலுங்கானா பிரிவினை தொடர்பான வேறுபாடுகள் காரணமாக பாஜகவை விட்டு வெளியேறி, சொந்தமாக கட்சி தொடங்கினார். அவர் ஆரம்பித்த கட்சிக்கு போதிய ஆதரவு இல்லை என்பதல், 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார்.

அப்போது, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேடக் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். பிறகு விஜயசாந்தி 2014 ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி விட்டு வெளியேறி காங்கிரசில் சேர்ந்தார்.

சமீபத்தில் நடிகை குஷ்பூ காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.