முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி தற்போது பாஜகவில் உள்ளார். ஆனால், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் விஜயசாந்தி பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வருகிறார் என கூறப்படுகிறது. இதற்கிடையில், பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெலுங்கனாவில் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிச.3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானாவில் தற்போது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே அங்கே […]
நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயசாந்தி நேற்று டெல்லி சென்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் விஜயசாந்தி பாஜகவில் இணைந்தார். தென்னிந்தியவின் மிகவும் பிரபலமான நடிகையான விஜய் சாந்தி, 1997-ல் பாஜக மூலம் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2005 ல் தெலுங்கானா பிரிவினை தொடர்பான வேறுபாடுகள் காரணமாக பாஜகவை விட்டு வெளியேறி, சொந்தமாக கட்சி தொடங்கினார். அவர் ஆரம்பித்த கட்சிக்கு போதிய ஆதரவு இல்லை என்பதல், 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர […]
நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் உள்துறை அமைச்சர் முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக பல பிரபலங்கள் பாஜக கட்சியில் இணைந்து வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகையான விஜய சாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை விஜயசாந்தி பாஜக-வில் 1998-ஆம் […]
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான விஜய சாந்தி தமிழில் “கல்லுக்குள் ஈரம்” திரைப்படம் அறிமுகமானார். அதன் பின்னர் “நெற்றிக்கண் ” , “மன்னன் ” , “ராஜஸ்தான்” ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தெலுங்கில் அவருக்கு “தேசிய விருது”, “நந்தி விருது” ஆகிய விருதுகளை வாங்கி உள்ளார்.தற்போது இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் […]