வைகோதான் NO:1 துரோகி !கே.எஸ்.அழகிரியை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்

துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார் என்று முன்னாள்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிதித்துள்ளார்.

துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார் என்று முன்னாள்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவிதித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்கவையில் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது  என்று பேசினார்.

வைகோவின் இந்த பேச்சிற்கு  தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. காங்கிரஸின் கூட்டணியில் இருந்துகொண்டு காங்கிரஸையே விமர்சிக்கும் வைகோ அரசியல் நாகரீகமற்றவர்  என்றும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

unknown node

இந்த நிலையில் முன்னாள்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவால்தான்  மாநிலங்களவையில் எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார் வைகோ.எம்.பி.யாகி இன்னும் பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை.பதினைந்து நாட்களுக்குள் நன்றி மறந்த ஒருவர் என்று சொன்னால் அது வைகோதான்.

அனாதையாக இருந்தவரை இன்றைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில்  சேர்த்ததன் விளைவாகத்தான் ,அவர் கணேச மூர்த்தி என்ற எம்.பி.யை பெற முடிந்தது.காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்துதான் மாநிலங்களவையில் வைகோ பேசியுள்ளார். அமித் ஷா சொல்லித்தான் வைகோ பேசியிருக்கிறார்.இவர் ஒரு மிகப்பெரிய துரோகி.நன்றி  மறந்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். கள்ளத்தோணி நாயகன்  என்ற பெயர் இப்போது துரோகி நம்பர் ஒன் என்ற நிலையில் வைகோ உள்ளார்.அவரை பற்றி பேசினால் கண்டிப்பாக அது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும்.ஆகவே  காங்கிரஸ் பற்றி பேசுவதை வைகோ தவறாக விமர்சனம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் ஒரு புறம் சென்றுகொண்டிருக்க,தற்போது காஷ்மீர் விவாதத்தில்  வைகோ பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

வைகோதான் NO:1 துரோகி !கே.எஸ்.அழகிரியை தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்