உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் : கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி போட்டி ...!

It has been reported that Chief Minister Yogi Adityanath will contest from Gorakhpur constituency in the Uttar Pradesh Assembly elections.

உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதியில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்பொழுது உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கோரக்பூரிலும், துணை முதல்வர் கேசவ் பிரசாத் அவர்கள் மவுரியாவிலும் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.