உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர்-குஷிநகர் நெடுஞ்சாலையில் ஜகதீஷ்பூர் அருகே, நின்று கொண்டிருந்த பேருந்து பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 6 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை ஐந்து ஆம்புலன்ஸ்களில் ஏற்றி சென்று கோரக்பூர் மாவட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக […]
வார்டுகளின் பெயர்களை மாற்றுவது எல்லை நிர்ணய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும், இதன் கீழ் கோரக்பூரில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது, இவற்றில் பல பிரமுகர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரால் பெயரிடப்பட்டது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், இஸ்மாயில்பூர் (சஹாப்கஞ்ச் என மாற்றப்பட்டுள்ளது) கார்ப்பரேட்டருமான ஷஹாப் அன்சாரி, பெயர்களை மாற்றுவது துருவமுனைக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர் தலாத் அஜீஸ், பெயர் மாற்றுவது பணத்தை வீணடிக்கும் செயலாகும். “இதன் மூலம் அரசாங்கம் […]
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதியில், 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சியை பிடிக்க வேண்டும் […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும்,பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். PM Narendra […]
உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு […]
உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில் ஓட்டுநர் தேர்வாளர்கள் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டதற்காக,இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட ஐம்பத்தி நான்கு விண்ணப்பதாரர்களை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை புறக்கணித்து இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று எம்பி சு.வெங்கடேசன் அவர்கள்,மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் […]
உத்திரபிரதேசம் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று சொல்லலாம். ஐந்து முறை அங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் . உத்திர பிரதேச மாநில முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றதால் காலியான அத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது. கோரக்பூருடன் இடைத்தேர்தல் நடைபெற்ற புல்பூர் தொகுதியிலும் பா.ஜ.க.படு தோல்வியடைந்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் வலுவான கூட்டணியே இதற்கு பெரும் காரணமாகும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி தொடருமானால் […]