உத்தரபிரதேசம் : பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வரின் மருமகள் அபர்ணா...!

Aparna, daughter-in-law of a former Uttar Pradesh chief minister and one of the senior leaders of the Samajwadi Party, today joined the BJP.

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரின் மருமகளும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபர்ணா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மருமகள்  அபர்ணா யாதவ் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மற்றும் பாஜக மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆகியோரின் முன்னிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்துள்ளார்.

பின் பேசிய அவர், பிரதமர் மோடியின் பேச்சுகளால் தான் அதிகம்  ஈர்க்கப்பட்டதாகவும், தேசம் தனக்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. எனவே தேசத்துக்கு சேவை செய்வதற்காக புறப்பட்டு உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.