உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் கவலைக்கிடம்.! மருத்துவமனை அறிக்கை.!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

unknown node

82 வயதான முலாயம் சிங் யாதவிற்கு மருத்துவர்கள் ஆரம்பம் முதலே தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  இவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கேட்டறிந்து வருகின்றனர்.

தற்போது அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை மேதாந்தா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் முலாயம் சிங் யாதவின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.