பரபரக்கும் உ.பி தேர்தல்.! எதிர்க்கட்சி கொறடா ‘திடீர்’ ராஜினாமா.!

Samajwadi Party Manoj Pandey

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 255 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எதிர்க்கட்சியாக சமாஜ்வாடிகட்சி செயல்பட்டு வருகிறது அக்கட்சி வசம் 111 எம்எல்ஏக்கள் உள்ளனர். அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் வரும் ஏப்ரல் மாதத்துடன் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை கொண்டு இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். … Read more

3 மாநிலங்கள்… 15 எம்.பிக்கள்.. இன்று மாநிலங்களவை தேர்தல்..

Rajya sabha elections 2024

நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளில் மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு பிரதான அரசியல் கட்சியும் தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் பலத்தை கொண்டு மாநிலத்தில் தங்கள் கட்சிக்கான மாநிலங்களவை வேட்பாளரை முன்னிறுத்தும். மாநிலங்களவை தேர்தல் : ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்டு வேட்பாளர்களை நிறுத்துவதால், பெரும்பாலும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவது இல்லை. இருந்தும் ஒரு சில இடங்களில் … Read more

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்.. தொல்லியல் துறையின் முக்கிய தகவல்கள்….

UP Varanasi Gyanvapi Masjid

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயமும், அதன் அருகே ஞானவாபி மசூதியும் உள்ளது. இந்த ஞானவாபி மசூதியானது இந்து கோயில் இருந்த இடம் என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஞானவாபி மசூதி சுற்று சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. அந்த சிலைக்கு பூஜை செய்ய மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து அமைப்பினர் … Read more

அயோத்தியில் பிரதமர் மோடி.! ரூ.15,700 கோடிக்கு திட்டங்கள்.. புத்தம புது ஏர்போர்ட்.. ரயில் நிலையம்…

PM Modi in Ayodhya

உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயில் திறப்பு விழாவானது (Pran Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது . இந்த விழாவில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, கார்கே.? காங். தலைவர்கள் கூறுவதென்ன.? அயோத்தியில் … Read more

ஹலால் சான்றிதழ் .! பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து.! 

NITESH RANE BJP MLA

இஸ்லாமிய மத சட்ட விதிமுறைப்படி மாமிச உணவுகளாக கொல்லப்படும் கால்நடைகளுக்கு , உணவு பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இதனை ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் வழங்குகின்றன.  இதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன. இந்த ஹலால் சான்றிதழ் உத்திர பிரதேசசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசத்தில் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட்டது போல மகாராஷ்டிராவிலும் ஹலால் சான்றிதழ் தடை செய்யப்பட வேண்டும் என மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ நித்தேஷ் ரானே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஹலால் சான்றிதழுக்காக சேகரிக்கப்பட்ட … Read more

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு.! உத்திர பிரதேசத்தில் ஆய்வு குழு தீவிர ஆய்வு.!

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் மத்திய மாநில குழுக்கள் ஆய்வு மேற்கொண்டனர். உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த மருந்து தொழிற்சாலையில் ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. புகார் கூறப்பட்ட மரியன் பயோடெக் நிறுவனமானது உத்திர பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரில் இருக்கிறது. அங்கு, மத்திய ஆய்வு குழுவும், உத்திர பிரதேச மாநில ஆய்வு குழுவும் இணைந்து மருந்து … Read more

வரதட்சணையாக பைக் தராததால் ‘முத்தலாக்’ விவாகரத்து.! அதிர்ச்சியில் உயிர்விட்ட பெண்ணின் தாயார்.!

2 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு தராததால் விவாகரத்து செய்த நபர். இதனை கேள்விப்பட்டு பெண்ணின் தயார் உயிரிழந்தார்.  வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும், இன்னும் அது பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் சில உயிரிப்புகள் கூட அவ்வப்போது நிகழ்வது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. உத்திர பிரதேசம், லக்னோவில் திருமணத்தின் போது வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக் வாங்கி தருவதாக கூறியதாகவும் அதனை வாங்கி தரவில்லை என்பதால் யூனஸ் … Read more

ஒரே பள்ளியில் 3 மாணவிகள் தொடர் தற்கொலை.! காதல் விவகாரமா.? போலீசார் விசாரணை…

உத்திர பிரதேசத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் அடுத்தடுத்து சுமார் 10 நாட்களுக்குள் தற்கொலை செய்துகொண்டனர்.   உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் செயல்பாட்டு வரும் உயர்நிலை பள்ளியில் கடந்த டிசம்பர் 10 முதல் 18 வரையில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். முதலில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்து 12ஆம் வகுப்பு மாணவிகள் ஒருவர் ஊரில் உள்ள குளத்தில் குதித்தும், இன்னொருவர் பூச்சிமருந்து குடித்தும் தற்கொலை செய்து … Read more

மொபைல் விளையாட்டுக்கு தடை.! தனது உயிரை மாய்த்துக்கொண்ட 10 வயது சிறுவன்.!

மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் 10 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.  தற்போது இளைஞர்கள், குழந்தைகள், சிறுவர்கள் , வயது முதிர்ந்தோர் என வயது கடந்து செல்போனுக்கு பலர் அடிமையாகி வருகின்றனர். அது தற்போது மனிதனின் இன்னொரு கை போல் மாறிவிட்டது. உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டம் அருகே ஒரு 10 வயது பள்ளி மாணவன் சில நாட்களாக பள்ளிக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே மொபைல் … Read more

குடிபோதைக்கு அடிமையான ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்காதீர்கள்.! மத்திய இணையமைச்சர் வேதனை.!

மதுகுடிப்போர் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் ஆண்களுக்கு தயவு செய்து உங்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்து வைக்காதீர்கள். – மத்திய இணையமைச்சர் கவுஷல் கிஷோர். உத்தரபிரதேச மாநிலம் லம்புவா பகுதியில் போதைப்பழக்க மீட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார இணையமைச்சர் கவுஷல் கிஷோர் கலந்துகொண்டார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், எனது மகன் ஆகாஷ் கிஷோருக்கு, நண்பர்கள் மூலம் மதுப்பழக்கம் ஏற்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவித்தான். … Read more