புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Union Cabinet approves suspension of Puducherry Assembly

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் கூட்டத்தில், புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.மேலும் ஒப்புதல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒப்புதல் அளித்த பின் புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்