மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜூலை 2022 முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், டெல்லி, […]
மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல். 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். அதன்படி, U-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அக்டோபர் 11 முதல் 30 வரை […]
உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். டி.ஏ.பி. உரங்களுக்கான மானியத்தை ரூ.1,650 லிருந்து ரூ.2,501-ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டில் ரூ.512 ஆக இருந்த டி.ஏ.பி. உர மானியம், 2021-22-ல் ரூ.1,650 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.2,501-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடி விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுபோன்று, ஜம்மு காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் […]
முதலீட்டு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு. வங்கிகள் கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமையின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வங்கியில் பணம் செலுத்தியவர்கள், வங்கி திவாலான 90 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை பெற முடியும் என்றும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். […]
மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தான் மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் […]
மின்சாரத்துறையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இந்தியாவும், அமெரிக்காவும், மின்சாரத்துறையில் இருதரப்பு நலன் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம், இந்தியாவின் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், அமெரிக்காவின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் […]
மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8,500 […]
நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,”நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.மேலும் இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இ-சிகரெட்டால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் தடை விதிக்கப்படுகிறது.மாணவர்கள், இ-சிகரெட் பயன்படுத்துவது 77 சதவீதம் அதிகரித்துள்ளது […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவில் நிலக்கரி சுரங்கம் & அது தொடர்பான நடைமுறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா துறையில் 26% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக […]