புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு. புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 2021-2022-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இதில், குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஆதி திராவிட மணமகள் நிதியுதவி திட்டம் ரூ.75,000 இருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் […]
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிந்த நிலையில், அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்திருந்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராத நிலையில், புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் […]
புதுச்சேரிசட்டசபை 31ம் தேதி வரை மூடல். புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மூடப்பட்டு சட்டசபை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், சபை காவலர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். மரத்தடியில் நடந்த பேரவை கூட்டத்தின் போது பணியில் இருந்த நிலையில் காவலருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தற்போது புதுச்சேரிசட்டசபை வளாகம் 31ம் தேதி வரை […]
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்தார். புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவையில் மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கட்டணம் ரத்து செய்வதாகவும், கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் […]
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கிரண்பேடி வராததால் ஆளுநர் உரை நிறுத்திவைப்பு. இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருந்தது. இந்த பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காததால், புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார். அதில், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை […]